பதிவு செய்த நாள்
26
பிப்
2021
08:02
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், முனியப்பன் கோவில் கும்பாபிஷேகவிழா நடந்தது. குமாரபாளையம், சேலம் சாலை முனியப்ப சுவாமி தேவஸ்தானம், முனியப்பன் சுவாமிகள், வலம்புரி விநாயகர், சப்த கன்னிமார் தேவியர் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன், கடந்த, 22ல் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல், யாக சாலை பூஜை, வேத பாராயணம், விமான அலங்கார பூஜை, பஞ்சகவ்ய பூஜை, நேற்று முன்தினம் காலை, 6:15 மணிக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, அலங்கார பல்லக்கில் முனியப்ப சுவாமி நகர் வலம் நடைபெறவுள்ளது. மண்டல பூஜைகள் நடைபெறவுள்ளதால் பக்தர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய கோவில் கமிட்டியார் தெரிவித்துள்ளனர்.