தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே அழகன்குளம் அம்மன் கோயில் குடியிருப்பு, ஆனந்தபுரத்தில் சிங்காரவேலன் ஆலய மாசி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு பாலாபிேஷகம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடந்தது. பக்தர்கள் ராதகாவடிகள், வேல்காவடிகள்எடுத்து ஊர்வலமாக சென்று, கோயில் முன் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.