ஈரோடு: பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். ஈரோடு, கள்ளுக்கடை மேடு, பத்ர காளியம்மன் கோவிலில் வரும், 3ல் குண்டம் விழா நடக்கிறது. இந்நிலையில் நேற்று, கோவில் சார்பில் பால்குட ஊர்வலம் நடந்தது. காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள், கருங்கல் பாளையம் காவிரி ஆற்றிலிருந்து, பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அதன் மூலம் மூலவருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இன்று இரவு அக்னி கபாலம், நாளை குண்டம் பற்ற வைத்தல், 3ம் தேதி தீ மிதிக்கும் நிகழ்வு நடக்கிறது. கொரோனா ஊரடங்கால், குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே, குண்டம் இறங்க அனுமதி தரப்பட்டுள்ளது.