கன்னிவாடி : மாசி மகத்தை முன்னிட்டு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், விசேஷ திருமஞ்சன அபிேஷகத்துடன் பூஜைகள் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
* கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி தேவி கருமாரியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், பாலநாகம்மன் கோயிலில், மாசி மகம் சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.