சாயல்குடி : சாயல்குடி அருகே உள்ள பூ வேந்தியநாதர்சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலுக்கு சேலம் திருமுறை சைவநெறி அறக்கட்டளை சிவாக்கர தேசிக சுவாமி வருகை தந்தார்.
மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. அவர் கூறியதாவது:பெண்கள் திருவாசகம் முற்றோதல் அவசியம் பாடவேண்டும். சிவன் கோயிலுக்குச் சென்று ஒரு குழுவாக இயங்கி பாட வேண்டும். அப்போது தான் சமயநெறி தழைத்தோங்கும். இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு இறை நாமத்தை கற்றுக் கொடுப்பதற்கும் வழிபாடு செய்யும் முறைகளைப் பற்றியும் போதிப்பதற்குதயார்படுத்த வேண்டும். வீணாக கேளிக்கைகளில் மனதை செலுத்தாமல் கோயிலுக்கு வந்துஇறைவனின் துதிப் பாடல்களைப் பாடியும் இறை தரிசனம் செய்துவிட்டு திரும்பவும் சிறந்ததாகும் என்றார். பரமக்குடி கருணைபுரி கைலாசநாதர் சிவனடியார் திருக்கூட்டம் அன்பர்கள், இளையான்குடி மாறநாயனார் அடியார்கள் திருக்கூட்டம் சிவனடியார்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.