ஆண்டாள் கோயிலுக்கே யானை ஸ்ரீவி., பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2021 06:03
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கே யானை ஜெயமால்யதா சொந்தம் என்பதற்கான உரிமையை அரசு பெற்றுத்தரவேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேட்டுப்பாளையம் முகாமில் ஆண்டாள் கோயில் யானை தாக்கபட்டதையடுத்து அந்த யானையை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என அசாம் மாநில வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் பக்தர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பக்தர்கள் கூறியதாவது: 2011ல் அசாம் மாநில வனத் துறையினரின் அனுமதியுடன் யானை கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாக ஆண்டாள் கோயிலின் நிர்வாகத்தின் கீழ்பராமரிக்கபட்டு வந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் யானையிடம் ஆசி பெற்றபிறகே கோயிலுக்குள் செல்வார்கள். இந்நிலையில் யானையை அசாம் வனத்துறையினர் கேட்பது பேரதிர்ச்சியாக உள்ளது. இதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, ஆண்டாள் கோயி லுக்கு யானை ஜெயமால்யதா சொந்தம் என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும்,என்றனர்.