மயிலாடுதுறை : சீர்காழியில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு விளக்கு பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்கரையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சியாக கொண்டாடுவது வழக்கம் அதேபோல் இவ்வாண்டும் கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி இன்று சிவசக்தி திருக்கல்யாணம் நடைபெற்றது அதனையொட்டி விளக்கு பூஜை நடைபெற்றது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மஞ்சல் குங்குமம் பூ மாங்கல்யம் ஆகியவற்றை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர், நாளை 11ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு காலை திருத்தேர் பவனி மற்றும் காவடி ஊர்வலமும் மதியம் அபிஷேகங்கள் மற்றும் இரவு மகா மயான சூறை நிகழ்ச்சி நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவித்தனர்.