செத்தவரை சொக்கநாதர் கோவிலில் மகாசிவராத்திரி கயிலாய வாயில் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2021 11:03
செஞ்சி: செத்தவரை சொக்கநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாய சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த செத்தவரை நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள மீனாட்சி உடனாகிய சொக்கநாதர் கோவிலில் நேற்று முன்தினம் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாய சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.அதனையொட்டி அன்று மாலை சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் மீனாட்சி உடனாகிய சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் கைலாய சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர் களுக்கு காட்சி தந்தார்.அப்போது சிவஜோதி மோன சித்தர் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து புதிதாக செய்துள்ள தேரில் சொக்கநாதர், மீனாட்சி அம்மன் கோவிலில் உலா நடந்தது.இரவு 8:00 மணிக்கு முதல் கால அபிஷேக ஆராதனையும், 11:00 மணிக்கு இரண்டாம் கால அபிஷேக ஆராதனையும், நள்ளிரவு 2:00 மணிக்கு மூன்றாம் கால அபிஷேக ஆராதனையும், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால அபிஷேக ஆராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது.