முத்துக்கவுண்டன்புதூர் அங்காளம்மன் கோவில் தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2021 01:03
சூலூர்: முத்துக்கவுண்டன் புதூர் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலூர் அடுத்த முத்துக்கவுண்டன்புதூர் அங்காளம்மன் கோவில் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்றது. இங்கு சிவ ராத்திரியை ஒட்டி குண்டம் மற்றும் தேர் திருவிழா நடப்பது வழக்கம். மு.க.புதூர், காளியாபுரம், ராசிபாளையம், அருகம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் குண்டம் திருவிழா துவங்கியது. 12 ம்தேதி காலை பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர். அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தபின், மாலை, அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளி அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.