தேவிபட்டினம்: தேவிபட்டினம் சித்தார்கோட்டை அருகே அத்தியூத்து உதிரம் உடைய அய்யனார், பகவதி அம்மன், கருப்பண சுவாமி கோவில் பாரிவேட்டை விழா கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதையொட்டி முதல் நாளில் இரவில் கரகம் எடுத்து பாரி வேட்டை உற்சவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மறுநாள் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்கள் வழிபாடு செய்தனர். பின்பு பகவதி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து பக்தர்கள் குலதெய்வ தரிசனம் செய்தனர்.இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த குலதெய்வ வழிபாட்டு மன்றத்தினரும், கிராமத்தினரும் திரளாக கலந்து கொண்டனர்.