நாகப்பட்டினம்:நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா சுவாமி தரிசனம் செய்தார். நாகை அடுத்த சிக்கலில், பிரசித்தி பெற்ற சிங்காரவேலவர் கோவில் அமைந்துஉள்ளது. கோவிலுக்கு நேற்று காலை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, உறவினர் பெண்களுடன் வந்தார். சிங்காரவேலவர் மற்றும் வேல்நெடுங்கண்ணி சன்னிதிகளில் தரிசனம் செய்தனர். பின், திருவாரூர் புறப்பட்டு சென்றனர்.