திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2021 05:03
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (மார்ச் 18) காலை 11:30 முதல் 11:45 மணிக்குள் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் மார்ச் 24ல் கைபாரம் நிகழ்ச்சி, 25ல் சைவ சமய ஸ்தாபித லீலை, 29ல் சூரசம்ஹார லீலை, 30ல் சுவாமிக்கு பட்டாபிஷகம், 31ல் திருக்கல்யாணம், ஏப்.,1ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.