முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தின் முன் மண்டபத்தில் தெய்வானை திருமணக்கோலம் சிற்பமாக உள்ளது. முருகன், தெய்வானை, இந்திரன் மூவரும் முத்து மாலைகள், பதக்கங்கள் என ஆபரணங்களை அணிந்தபடி உள்ளனர். இதற்கு எதிரிலுள்ள துாணில் மணக்கோலத்தை தரிசிக்கும் விதமாக மகாராணி மங்கம்மா, பேரனான விஜயரங்க சொக்கநாதன் கை கூப்பியபடி நிற்கிறார். ராணியின் கழுத்தில் முத்து மாலை இல்லை. ஆனால் கைகளில் வளையல்கள், விரல்களில் மோதிரம் அணிந்துள்ளார். தலையில் கொண்டையுடன் காட்சி தருகிறார் மகாராணி.