பதிவு செய்த நாள்
28
மார்
2021
09:03
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குடம், காவடி, அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா மார்ச் 22 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று ( மார்ச் 28) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குடம், காவடி, அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். வழிவிடுமுருகன் கோயிலில் தினமும் வள்ளி, தெய்வானை சமேத முருகருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது. தினமும் இரவு பக்திசொற்பொழிவு, சண்முகார்ச்சனை நடக்கிறது. நேற்று காவடி, அலகு குத்தும் பக்தர்கள் கையில் காப்புக்கட்டினர். முக்கிய நிகழ்ச்சியாக இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, அதி காலை முதல் பக்தர்கள் பிரம்புரிஸ்வரர் கோயிலிலிருந்து காவடிகள், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மாலையில் பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது. முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கொரோனா பரவல் விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.