சிறுமி ஒருத்தி இரண்டு கோழிகளை வளர்த்தாள். தீவனமாக புழு, பூச்சிகளைப் பிடித்துக் கொடுப்பாள். ஒருநாள் பகலில் எதிர்வீட்டுக்காரனின் தோட்டத்தில் கோழிகள் மேய்ந்த போது கீரைப்பாத்தியை கால்களால் கிளறின. அதைக் கண்ட அவன் கோழிகளி்ன தலையைத் திருகி வீசவே வேதனைக்கு ஆளானாள். தவறாக ஒரு வார்த்தையும் பேசவில்லை. இறந்த கோழிகளை அம்மாவிடம் கொடுத்து சமைக்கச் சொன்னாள். எதிர்வீட்டுக்காரனிடம் சென்ற சிறுமி, ‘‘மாமா! நீங்கள் பசியுடன் இருப்பீர்கள். உங்களுக்கு உணவளிக்கும்படி மனதில் தோன்றியது’’ என்றாள். அவளது பேச்சும், செய்கையும் கண்ட அவன் தலைகுனிந்தான். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள். பகைவனுக்கும் நன்மை செய்யுங்கள்.