பதிவு செய்த நாள்
07
ஏப்
2021
11:04
பொள்ளாச்சி:காட்டம்பட்டிபுதுார் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கரிவரதராஜபெருமாள் கோவிலில் நேற்று, திருவோணம் நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது.நெகமம் அருகே, காட்டம்பட்டிபுதுாரில் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கரிவரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வாரத்தின் அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜையில், வடசித்துார், நெகமம், பொள்ளாச்சி மற்றும் காட்டம்பட்டி சுற்றுப்பகுதி மக்கள் வழிபட்டு செல்கின்றனர். நேற்று, பெருமாளுக்கு திருவோண நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு, 16 வகை திருமஞ்சனம் சாத்தப்பட்டது, தொடர்ந்து, அலங்கார பூஜையும், மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அதேபோல,ஆனைமலை அடுத்த, அர்த்தநாரிபாளையம் அழகு திருமலைராயப் பெருமாள் கோவிலிலும், குகைப் பெருமாள் கோவிலிலும் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.