பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் பங்குனி வெள்ளி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2021 05:04
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி கடைசி வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இக்கோயிலில் பங்குனி திருவிழாவில் பௌர்ணமி நாளில் மின்சார தீப தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து நேற்று பங்குனி கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி காலையில் பக்தர்கள் அம்மனுக்கு பால் ஊற்றி வழிபட்டனர். காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் மாலை தொடங்கி பக்தர்கள் மாவிளக்கு ஏற்றியும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.