நல்லதைப் பேசவும், நல்லதை சாப்பிடவும் மட்டுமே நமக்கு வாய் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களை எடுத்தெறிந்து பேசுவது, பொய் சொல்வது, புறம் பேசுவது போன்ற செயல்கள் நாக்கை களங்கப்படுத்தும் செயல். ஐம்புலன்களில் வாயானது சாப்பிடுதல், பேசுதல் என இரு பணிகளைச் செய்கிறது. வாயை நல்ல சொற்களை பேச மட்டும் பயன்படுத்துவோம். ‘‘உதடுகள் பாவம் செய்யாதபடி ஜாக்கிரதையாய் இருங்கள். துதித்தலும், சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படலாமா?’’ என்கிறது பைபிள்.