ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2021 10:04
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது. 2 நாட்களுக்கு முன்பு, பொங்கல் விழா நடந்தது. பின்னர், பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில் பக்தர்கள் இறங்கினர். நேற்று மாலை தேரோடும் நிகழ்ச்சி நடந்தது. கொட்டும் மழையில் கோயிலை சுற்றி தேர் 3 முறை வலம் வந்தது.