திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஜெயந்தன் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2021 06:04
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவர் சன்னதியில் ஜெயந்தன் பூஜை நடந்தது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சித்திரை முதல் வெள்ளிக்கிழமை யோக பைரவருக்கு ஜெயந்தன் பூஜை நடைபெறும். சாப விமோசனத்திற்காக இந்திரன் மகன் ஜெயந்தன் பைரவரை தவமிருந்து வழிபட்டதாக புராணம். இதனையடுத்து இங்கு ஜெயந்தன் பூஜை நடைபெறுகிறது. பைரவர் சன்னதி முன்பாக ஜெயந்தன் மகாராஜா சிலையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் துவங்கியது. காலை 11.00 மணிக்கு மூலவர் யோக பைரவருக்கு விபூதிக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்புத் தீபாராதனை நடந்தது. காலை முதல் பெண்கள் பைரவர் சன்னதியில் மாவிளக்கேற்றி தீப வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தனர். கொரோனா கட்டுப்பாடு விதிகளின்படி வழக்கமாக நடைபெறும் பைரவர் யாகம் மற்றும் உற்சவர் திருவீதி உலா நடைபெறவில்லை. முகக் கவசத்துடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.