கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அருகே கோவிலுக்குள் புகுந்து வெள்ளி கவசங்களை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கருமத்தம்படடி அடுத்த சின்ன மோப்பிரிபாளையத்தில் ஆதி விநாயகர் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு, பூஜையை முடித்த பூஜாரி, கோவிலை பூட்டி சென்றார். காலையில் கோவிலை திறக்க வந்த போது, கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தாரர். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, விநாயகருக்கு சாத்தப்பட்டிருந்த, 3 கிலோ எடையுள்ள வெள்ளி கவசங்கள் திருடப்பட்டிருப்பது தெரிந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தடயங்களை சேகரித்தனர். கோவிலில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.