பதிவு செய்த நாள்
19
ஏப்
2021
06:04
சேலம்: கொரோனாவால், கோவில்களில் பக்தர்களுக்கு பரிமாறப்பட்ட சாப்பாடு, பார்சல் ஆக தற்போது வழங்கப்படுகிறது. தமிழகத்தில், கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால், கோவில்கள் மூடப்படாமல், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், அன்னதான திட்டம் செயல்படும், ஹிந்து சமய அறநிலைய கட்டுப்பாடில் உள்ள, 650 கோவில்களில், தினமும் மதியம் சாப்பிடும், 65 ஆயிரத்து, 423 பேருக்கு மாற்றுத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பு, சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், கூட்டு பொரியல், அப்பளம், அன்னதான கூடங்களில் இலை போட்டு பக்தர்களுக்கு பரிமாறப்பட்டன. கொரோனாவால் தற்போது மதியம், தயிர், சாம்பார், லெமன், புளி, தக்காளி சாதங்கள், சுழற்சி முறையில் பார்சல்களாக வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் நிலையில், பழைய முறையில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும் என்று, கோவில் நிர்வாகிகள் கூறினர்.