பதிவு செய்த நாள்
19
ஏப்
2021
06:04
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, தானம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பாரத கோவிலில், ஊர்மக்கள் நலனுக்காகவும், மழை வேண்டியும், மஹாபாரத தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது. தாளாப்பள்ளி லட்சுமி நாராயண நாடக சபை கலைஞர்கள், வேடமணிந்து, மஹாபாரத நிகழ்வுகளை நடித்துக் காட்டினர். நிறைவு நாளான நேற்று, பாரத போரில், பீமனுக்கும், துரியோதனனுக்கும் நடந்த போரில், துரியோதனனின் தொடை முறித்து வீழ்த்தப்படுவதும், அஸ்தினாபுரத்தை தர்மரிடம் ஒப்படைத்து, முடிசூட்டப்படும் காட்சிகள் இடம்பெற்றன. துரியோதனன் படுகள நிகழ்ச்சியை, ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.