சித்திரைத் திருவிழா: கோயிலுக்குள் சுவாமி அம்மன் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2021 06:04
தேவகோட்டை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்குள்ளேயே சுவாமி உலா நடந்தது.
தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் வழக்கம் போல் சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம், நடைபெற்று வருகிறது. சுவாமி வீதியுலா, தேரோட்டம் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்திற்கு உள்ளேயே சுவாமி உலா நடைபெறும். அதன் படி இன்று சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, கோயிலுக்குள்ளேயே மீனாட்சி, சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்தனர்.