Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகப்பேறு தரும் குழந்தை சிவன் பகீரதப் பிரயத்தனம் என்பது ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருப்புமுனை உண்டாக திருப்புடைமருதுார் வாங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
11:04

ஜாதக ரீதியாக கிரகநிலை உங்களுக்கு சரியில்லையா... திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுபவிஷயங்களில் தடை குறுக்கிடுகிறதா... உங்களுக்கு நல்ல தீர்வு தரக் காத்திருக்கிறார் திருநெல்வேலி திருப்புடைமருதுார் நாறும்பூநாத சுவாமி. ஏப்.24ல் இங்கு நடக்கும் மகாபிரதோஷ விழாவில் பங்கேற்று பலன் பெறுங்கள்.  


இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் வீரமார்த்தாண்டவர்மன் ஒருமுறை வேட்டையாடச் சென்றார். அவர் எய்த அம்பு துளைத்த மான், அருகில் இருந்த மருத மரத்திற்குள் சென்று மறைந்தது. மன்னர் அங்கு பார்த்த போது மான் சிவலிங்கமாக மாறியிருந்தது. அதிசயம் கண்ட மன்னர் சிவன் கோயில் எழுப்பி வழிபட்டார்.  நாறும்பூநாதர் என சுவாமிக்கு பெயர் உண்டானது.   கருவூர் சித்தர் இங்கு வந்த போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஓடியது. இதனால் மறுகரைக்குச் செல்ல முடியவில்லை. எனவே கரையில் நின்றபடியே சிவனை நினைத்து பாடினார். அதை ரசிக்க விரும்பிய சிவன், தனது இடது காதில் கை வைத்தபடி ஒருபுறம் சாய்வாக திரும்பினார்.  ‘‘என்னை மனதில் நினைத்தபடியே ஆற்றில் இறங்கி நடந்து வருக’’ என சிவன் கட்டளையிட்டார். கருவூராரும் ஆற்றைக் கடந்து தரிசனம் செய்தார். பின்பு சித்தர், ‘‘சுவாமி.. வருங்காலத்திலும் இங்கு நிரந்தரமாக தங்கியிருந்து பக்தர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து நிறைவேற்ற வேண்டினார். சிவனும் வேண்டுகோளை ஏற்றார். இங்குள்ள கோமதியம்மன் உச்சி முதல் பாதம் வரை ருத்ராட்ச திருமேனி கொண்டவராக இருக்கிறார்.
 இக்கோயிலில் ஏப்.24 ல் மகாபிரதோஷ வழிபாடு சிறப்பாக நடக்கிறது. அப்போது ராஜ கோபுர திருப்பணிக்கான வேண்டுதல் விழாவை மகாராஷ்டிரா ேஷகான் சத்குரு ஸ்ரீகஜானன் மஹராஜ் ஆசியுடன் பக்தர்கள் நடத்தவுள்ளனர். புதிய முயற்சியாக கோயிலின் தலவரலாற்றை ஒரு காட்சியாக (Set) முன்னனி கலை இயக்குநரின் கை வண்ணத்தில் உருவாக்க உள்ளனர்.
பிரதோஷ பூஜையில் மாலை 4:30 மணிக்கு அபிேஷகம் நடக்கும். அப்போது சுவாமி, அம்மன், நந்திகேஸ்வரருக்கு 3024 (1008,1008,1008) செவ்விளநீர் அபிேஷகம் நடக்கும். பின்னர் செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை பூக்களால் சுவாமி, அம்மனை அலங்காரம் செய்வர். மாலை 5:30 மணிக்கு 31 விளக்குகளுக்கு ஒருநபர் வீதம் 324 நபர்கள் கோயில் முழுவதும் 10008 விளக்குகளை ஒரே நேரத்தில் ஏற்றுவர். சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மூன்று முறை 10008 தீப ஒளிக்கு நடுவில் பவனி வருவர். ஜாதக ரீதியாக கெடுபலன் உள்ளவர்கள் இதில் பங்கேற்றால் தோஷம் விலகும். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை பேப்பரில் எழுதி வந்து சுவாமி சன்னதியில் இருந்து கீழே இறங்கும் வழியில் உள்ள பிரார்த்தனை பெட்டியில் செலுத்தலாம்.
வீரவநல்லார், முக்கூடலில் இருந்து  கோயிலுக்குச் செல்ல மதியம் 2:00 மணி முதல் இலவசப் பேருந்து இயக்கப்படுகிறது.   
எப்படி செல்வது
திருநெல்வேலி – பாபநாசம் சாலையில் 28 கி.மீ., துாரத்தில் வீரவநல்லுார். இங்கிருந்து பிரியும் சாலையில் 7 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar