இளைஞர்கள் பெற்றவர்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது. சுமை தாங்கியாய் இருக்க வேண்டும். படிப்பை முடித்ததும், கிடைத்த வேலைக்கு இளைஞர்கள் செல்லத் துணிய வேண்டும். படிக்கும் காலத்தில் பெற்றோருக்கு பணத்தட்டுப்பாடு இருந்தால் அவர்களிடம் கோபிக்காமல், பகுதி நேரப் பணிக்குச் சென்று சம்பாதித்து கல்விச்செலவை தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். அதைப்போலவே வியாபாரிகள் நேர்மையும், உண்மையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்க வேண்டும் என தவறான விஷயங்களில் ஈடுபடுவது கூடாது.
லாப நோக்கத்துடன் நியாயம், தர்மத்தையும் தங்களின் இரு கண்களாக மதித்துப் போற்ற வேண்டும். உழைப்பு பற்றிச் சொல்லும் போது, எந்த மனிதனும் தனது கைகளால் உழைத்து உண்ணும் உணவே உயர்வானது. ஒருவன் தன் கையால் உழைப்பது என்பது மோசடியும், பொய்யும் கலக்காத வியாபாரத்துக்கு சமம் என்கிறார் நாயகம். இதைப் பின்பற்றி ஒவ்வொருவரும் தங்களின் பெற்றோரின் பாரத்தை தாங்கும் வகையில் உழைக்க வேண்டும். வியாபாரத்தில் நேர்மையை, துாய்மையை லட்சியமாகக் கொண்டு செயல்பட வேண்டும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:30 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:06 மணி.