சித்திரை - 3, 4: மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது போல் செயல்பட்டாலும் இறுதியில் நீங்கள் நினைத்ததையே செய்யும் குணமுடைய சித்திரை நக்ஷத்திர அன்பர்களே, இந்த மாதம் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்க கூடும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். அரசியல்துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.
பரிகாரம்: பிரதோஷ வேளையில் சிவனையும் நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சனை களும் சுமூகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் - 09 அதிர்ஷ்ட தினங்கள்: மே - 21
சுவாதி: வைராக்கியமும், பிடிவாத குணமும் கொண்ட சுவாதி நக்ஷ்த்திர அன்பர்களே, நீங்கள் விடா முயற்சியுடைவர். இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. உங்களின் கவனக்குறைவால் மேலதிகாரிகளிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். குடும்பம் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் குடும்பத்துடன் சென்று வருவீர்கள். பெண்கள் எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. கலைத்துறையினர் நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். அரசியல்வாதிகள் மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். கட்சிப்பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். மாணவர்கள் கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.
பரிகாரம்: ஏரிகாத்த ராமரை வணங்க குடும்பத்தில் குழப்பம் நீங்கி நண்மை உண்டாகும். ஆரோக்கியம் உண்டாகும். சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் - 10 அதிர்ஷ்ட தினங்கள்: மே - 22
விசாகம் - 1, 2, 3: எளிதில் கோபம் அடையாமல் பழகுவதற்கு இனிமையான குணம் கொண்ட விசாகம் நக்ஷ்த்திர அன்பர்களே, இந்த மாதம் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பண வரத்து எதிர் பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. சக பணியாளர்களின் வேலைகளில் உங்கள் உதவி தேவைப்படும் சூழல் உருவாகலாம். குடும்பம் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும். பெண்கள்: மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை. கலைத்துறையினர் மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்க துன்பங்கள் தீரும். மனக்கவலை அகலும். சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் - 11 அதிர்ஷ்ட தினங்கள்: மே - 23
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »