ராமநாதபுரம் முருகன் கோயில்களில் வைகாசி விசாக வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2021 11:05
ராமநாதபுரம் : வைகாசி விசாகத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை நடந்தது.
அனுமதி இல்லாததால் பக்தர்கள் வெளியே விளக்கேற்றி வழிபட்டனர்.கொரோனா தொற்று பரவலை தடுக்க மே 31 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பூஜைகள் தினமும் நடக்கிறது.நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் முருகர், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், புத்தாடையில் அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கபடவில்லை. இருந்தாலும் சிலபக்தர்கள் வெளியே சூடம், விளக்கு ஏற்றி வழிபட்டனர்.இதேபோல பட்டணம் காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோயில், வெளிபட்டணம் பாலசுப்ரமணிய சுவாமி கோயில், பால தண்டாயுத சுவாமி கோயில், குமராய்யா கோயில் ஆகிய இடங்களில் அபிஷேகம் பூஜைகள் நடந்தது.