பதிவு செய்த நாள்
26
மே
2021
11:05
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், வைகாசி விசாகத்தையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பொள்ளாச்சி, ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது.
முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர், முருகப்பெருமான், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வால்பாறை வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகத்தையொட்டி, நேற்று காலை, 7:00 மணிக்கு பால், தயிர், திருநீறு, திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை என்பதால், கோவில் அர்ச்சகர் மட்டும் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்தார்.சிறப்பு ேஹாமம் கொரோனா நோய் நீங்கி, உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ, சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், நேற்று முதல், வரும், 30ம் தேதி வரை, தினமும் காலை, 7:00 மணிக்கு நித்யபாராயணம் மற்றும் ஹோமம் நடைபெறுகிறது.பக்தர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே, தங்கள் குடும்பத்திற்காகவும், உலக நலனிற்காகவும், அன்னையை வேண்டிக்கொள்ளுங்கள் என, கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.