Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » பிதுர்யக்ஞ விதி
படலம் 28: பிதுர்யக்ஞ விதி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2012
04:06

28 வது படலத்தில் பிதுர்யக்ஞ விதி நிரூபிக்கப்படுகிறது. அதில் முதலாவதாக லோக மார்க்கத்தை அனுஷ்டிப்பவர்களுக்கும் கிருஹஸ்தவர்களுக்கும் கட்டாயமாக செய்ய வேண்டிய பிதுர்யக்ஞ முறை கூறப்படுகிறது என கூறுகிறார். பிறகு கிருஹத்திலோ, ஓர் அறையிலோ, வெளியிடத்திலோ பிதுர் கிருஹம் ஏற்படுத்தி அங்கு பீடத்திற்கு செய்ய வேண்டிய முறையுடன் மூன்று மேகலையுடன் கூடிய பீடத்தை அமைத்து பிறகு உள்ளங்கை அளவு குழி செய்து பீடமத்தியில் முறைப்படி கூர்ச்சம் வைத்து. பிறகு இறந்தவர்க்கு ஆசனம் கொடுத்து ஆவாஹனம் செய்யும் முறையுடன் தீட்டு இல்லாததும் ஸ்நானம் செய்தவர்களுமான ஸ்தீரிகளால் புதியதான மண்பாண்டத்தில் தயாரிக்கப் பட்டதும் வெல்லம் நெய் இவைகளுடன் கூடியதும் தாம்பூல சஹிதமாயும் பிரதிதினமும் இரண்டு காலத்தில் நிவேதனம், செய்ய வேண்டும் அல்லது ஒரு காலத்திலோ நிவேதனம் செய்யவேண்டும் அன்னத்தை நிவேதனம் செய்யும் முறை மந்திரத்துடன் கூறப்படுகிறது இரண்டு காலத்திலும் செய்யவேண்டிய அன்ன நிவேதனமானம் பகலிலேயே செய்யவேண்டும் என கூறப்படுகிறது அல்லது இங்கு அர்க்யபலியை கொடுக்கவும் என்றும் வேறு இடத்தில் அன்னத்தை கூறப்படுகிறது. பிறகு பீடம் இன்றி குழியை மட்டுமோ செய்து சராவபாத்திரத்தில் கருங்கல்லையோ செங்கல்லையோ வைத்து அங்கு முன்பு கூறப்பட்டுள்ள கூர்ச்சத்தை வைத்து இந்த கர்மாவை அனுஷ்டிக்கவும் மூன்று பிண்டமோ கொடுக்க வேண்டும் என வேறுவிதமாக கூறப்படுகிறது. இந்த கர்மாவானது 7,9,10 ஆகிய தினங்களில் அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு 10 வது தினத்தில் அந்த இடத்திலிருந்து மண்ணைஎடுத்து புஷ்பம் பிண்டம், இஷ்டிகை, முதலியவைகளுடன் அந்தகூர்ச்சம் பாஷாணம் பீடம் இவைகளை பாட்டு வாத்யம் இவைகள் சஹிதமாகவோ இல்லாததாகவோ தீர்த்த மத்தியில் போட்டு விடவேண்டும். இந்த எல்லா கர்மாவும் புண்ய தீர்த்தத்திலோ, புண்ய÷க்ஷத்திரத்திலோ, செய்யவேண்டும் என கூறப்படுகிறது. மேல்கூறி இந்த செயல்முறையானது பிராம்மணர் முதலானவர்களும் பொது விதியாகும். இங்கு பிராம்மணர்கள் விஷயத்தில் 10 பிண்டமும், க்ஷத்திரியர்களுக்கு 12 பிண்டமும், வைஸ்யர்களுக்கு 15 பிண்டமும், சூத்திரர்களுக்கு 30 பிண்டமும் கொடுக்க வேண்டும் என்று விசேஷமாகும் என கூறப்படுகிறது. இவர்களின் பிண்டஜலதர்பண கிரியை யானது தீட்டு முடியும் வரை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு பிண்டதானம் கொடுக்கும் விஷயத்தில் முதல்நாளில் 1 பிண்டமும் இரண்டாம் நாள் 4 பிண்டமும், 3ம் நாள் 5 பிண்டமும் கொடுக்க வேண்டும் என மூன்று தினத்தின் பிண்ட தான முறை கூறப்படுகிறது. முடிவில் 10 தினம் முடிந்த பிறகு ஏகோத்திஷ்ட சிரார்த்தம் செய்தால் 1 பிண்டம் கொடுக்கவும் பிண்டம் பிரதான கொடுக்கும் நாள் வரை தீட்டு உண்டு அறிவிக்கப்படுகிறது. இவ்வாறாக 28வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஹே முனிபுங்கவர்களே! பித்ரு யக்ஞ விதியை கூறுகிறேன். கேளும் என்கிறார். லோக அனுஷ்டானத்தை அதிகரிக்கும் கிருஹஸ்தர்களுக்கு அவச்யமாகும்.

2. வெளிபிரதேச அறையில் அல்லது தனி அறையிலோ வீட்டிலோ பித்ருக்ருஹத்தை செய்யவும். பீடத்திற்காக கூறியபடி பீடமும் மூன்று மேகலையுடன் கூடியதாக செய்யவும்.

3. அதற்கு முன்னதாக தாளமாத்ர அளவில் புதியதாக குழி செய்யவும். கோமய ஜலத்தால் மெழுகி வைக்கப்பட்ட பீடத்தின் மத்தியில்

4. ஐந்து, ஏழு, தர்பங்களால் ப்ராதேசமாத்ர அளவில் கூர்ச்சம் செயற்பாலது. விப்ரர்களின் முறையாக பதினோரு

5. தர்ப்பங்களாலோ, குசங்களாலோ, தெற்கு நுனியாக கூர்ச்சத்தை செய்து ப்ரணவாஸனம் கொடுத்து மூர்த்தியை ஆவாஹிக்க வேண்டும்.

6. அந்தந்த கோத்ரத்துடன் கூடிய தேவதத்தர் முதலான மூர்த்தியின் பொருட்டு ஸ்வதா என்று கூறி அதே போல் ஆத்மா பெயருடன் கூடி

7. அந்த பித்ரு கோத்ர நாமாவை ஓம் என்பதுடன் நியஸிக்கவும். பாத்யாதிகள் கொடுத்து வஸ்திரம், சந்தனம், புஷ்பம், எள்ளுடன் கூடியதும்

8. தூபம், தீபம் கொடுத்து துவரைப்பருப்பு முதலியவைகளால் நிர்மாணிக்கப்பட்டதை நைவேத்யம் அதில் பாதியாகவோ நிர்மாணிக்கப்பட்டதை நைவேத்யம் அல்லது ஆத்மப்ரீதியான நிவேத்யமோ

9. நிவேதித்து வெல்லம், நெய்யுடன் காய்கறிகளுடன் கூடியதாக நிவேதிக்கவும். ஸ்நானம் செய்து ஆசவுசமில்லாதவர்களால் புதிய மண்டபத்தில் தயாரிக்க வேண்டும்.

10. தாம்பூலமின்றி பிரதிதினமும் இரு காலத்திலும் கொடுக்கவும். இருகால நிவேதனமும் பகலிலேயோ, ஒரே காலத்திலேயோ இரண்டு காலத்திலோ நிவேதனமும் செய்யவேண்டும்.

11. இந்த நிவேதனத்துடன் அந்த பித்ரு நாம ஸ்வதாந்தமும் ஹ்ருதய மந்திரத்துடனும் கொடுக்கவும். ஓரிடத்தில் அர்க்யமும் பலியும் மற்ற இடத்தில் அன்னமும் கல்பிக்க வேண்டும்.

12. மூன்று பிண்டங்கள் மட்டுமோ கொடுத்து குழியில் ஸமர்ப்பிக்கவும். இஷ்டகையோ பாஷாணத்தையோ சராவத்தில் வைத்து

13. முன்பு கூறிய கூர்ச்சத்தை கொடுத்து அங்கு இந்த கர்மாவை செய்யவேண்டும். ஏழுநாள் ஒன்பது நாள் பத்துநாள் கணக்கிலோ செய்ய வேண்டும்.

14. அந்தநாள் முடிவின் அபராஹ்னத்தில் முன்பு கூறிய விதிப்படி அர்ச்சித்து அங்கிருந்து மண்ணை எடுத்து புஷ்பசஹிதமான பிண்டத்தை

15. அதன் கூர்ச்சமிஷ்டிகையுடனோ கல்லினுடனோ பீடிகையுடனோ எடுத்துபீடங்களை தூபதீபத்துடன்

16. கும்மியடித்துக் கொண்டு தீர்த்த மத்தியில் விடவும். இந்த எல்லா கர்மாவும் புண்யஸ்தலம் நதிகளிலோ செயற்பாலது.

17. பிராம்மணர் முதலானவர்களுக்கு ஸாமான்யமாக சொல்லி விசேஷம் கூறப்படுகிறது. பிராம்மணர்கள் தசபிண்டமும், க்ஷத்ரியர்கள் பனிரெண்டு பிண்டமும்

18. வைச்யர்கள் பதினைந்து பிண்டமும் சூத்ரர்கள் முப்பது பிண்டம் என கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த தினம் வரை ஆசவுசமோ அந்த தினம் வரை பிண்டோதகக்ரியை செயற்பாலது.

19. முதல் தினத்தில் ஒரு பிண்டமும் இரண்டாம் தினம் நான்கு பிண்டமும் மூன்றாம் தினத்தில் ஐந்து பிண்டமுமாக மூன்று தின விஷயத்தில் விதிக்கப்ப்ட்டுள்ளது.

20. பத்தாம் நாள் ஆதிக்ராந்தமாக ஏகோத்திஷ்டம் செய்தால் ஒரு பிண்டம் கொடுக்கவும்.பிண்டதான ஸம்பனம் வரை ஆவுசமாகும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பித்ருயக்ஞ விதியாகிற இருபத்தியெட்டாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar