பழநி: பழநியில் கோயில் வாயிலில் நின்று பக்தர்கள் வழிபடுகின்றனர். பழநி கோயில்கள் மிகுந்த நகரம் இங்கு பக்தர்கள் முருகன் கோவிலில் வழிபட்ட பின்னர் தான் அன்றாட வேலைகளை பலர் துவங்குகின்றனர்.
நேற்று பிரதோஷம் மாலைநேரத்தில் சிவன் கோயில்களில் முன்பு பக்தர்கள் நின்று வழிபட்டனர். அதே போல் இன்று செவ்வாய்க்கிழமை கார்த்திகை, இது போன்ற நாட்களில் பக்தர்கள் கோயில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். மாதம் தோறும் சஷ்டி செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் அதிக அளவில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வார். இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டால் தொடர்ந்து திருவிழா சத்து செய்யப்படுவதாலும், கோவிலுக்குள் அனுமதி இல்லாத காரணத்தினாலும் பலர் கோயிலின் வெளிப்பகுதியில் நின்று கோபுர கலசத்தை வணங்கி செல்கின்றனர். சிலர் கோயிலின் வாசலில் நின்று தரிசித்துச் செல்கின்றனர். பழநி கோயிலுக்கு நேர்த்திக் கடன்கள் நிறைவேற்ற வழியின்றி, கோயிலுக்குள் செல்ல முடியாமலும் பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.