ஈரோடு: தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும், தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பை, தமிழ் தேச நடுவம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து, தமிழ் தேச நடுவத்தின் மாநில நெறியாளர் கண.குறிச்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதே சமயம், இரண்டுக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கின்றனர். தமிழில் அர்ச்சனை செய்ய குறைந்த கட்டணம், சமஸ்கிருத அர்ச்சனைக்கு, சில மடங்கு கூடுதல் கட்டணமும் வசூலிக்க, அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதுபோல அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கும் அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆகம பயிற்சி பெற்ற பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பும் வரவற்புக்குரியது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.