சென்னிமலை: கொரோனா ஊரடங்கால், சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு செல்ல, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மலை கோவிலில் நடப்பதாக நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்கள், நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவிலில் நேற்று நடப்பதாக நிச்சயிக்கப்பட்ட மூன்று திருமணங்கள், மலை அடிவாரத்தில் உள்ள, விநாயகர் கோவில் முன் நடந்தது. வெவ்வேறு நேரத்தில் இந்நிகழ்வுகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு வந்த சொற்ப உறவினர்கள், அட்சதை தூவி மணமக்களை ஆசீர்வதித்தனர்.