பதிவு செய்த நாள்
16
ஜூன்
2021
06:06
பல்லாரி : கர்நாடகாவில் உள்ள புராதன நினைவு சின்னங்கள் பார்வையிட தொடர்ந்து தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் நாட்டில் உள்ள அனைத்து புராதன நினைவு சின்னங்களை பார்க்க, இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தடை விதித்திருந்தது.தற்போது கொரோனா ஓரளவு குறைந்துள்ளதால், நாடு முழுவதிலுமுள்ள புராதன நினைவு சின்னங்கள், இன்று முதல் திறக்க இந்திய தொல்லியல் ஆய்வகம் உத்தரவிட்டது.இதே வேளையில் அந்தந்த மாநில சூழ்நிலை பொறுத்து முடிவு எடுத்து கொள்ளவும் அனுமதியளித்துள்ளது.இந்நிலையில், பல்லாரி மாவட்டம், ஹொஸ்பேட், ஹம்பியில் புராதன நினைவு சின்னங்கள் தற்போதைக்கு திறக்காமல் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மாநிலத்தில், 500க்கும் அதிகமான புராதன நினைவு சின்னங்கள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும், வரும், 21 க்கும் பின், அப்போதைய சூழ்நிலை பொறுத்து திறப்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய உள்ளனர்.சுற்றுலா பயணியருக்கு அனுமதியளிப்பது குறித்து, ஓட்டல் உரிமையாளர்கள், மாநில அரசுடன் ஆலோசித்து அடுத்துகட்ட நடவடிக்கை எடுக்க இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கர்நாடக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.