Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நலம் தரும் மந்திரம் பிரிந்து போன சொந்தங்களும், செல்வங்களும் மீண்டும் வந்து சேர.. பிரிந்து போன சொந்தங்களும், ...
முதல் பக்கம் » துளிகள்
பன்னிரெண்டு பௌர்ணமி விரத ரகசியங்கள்
எழுத்தின் அளவு:
பன்னிரெண்டு பௌர்ணமி விரத ரகசியங்கள்

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2021
04:06

சித்திரை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.  15-வது பௌர்ணமி திதி சித்ரா பௌர்ணமி தேவர்களுக்கு உகந்தது. சித்திரை மாதத்தின் முதல் நாள்தான் பூமியை ஸ்ரீ பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது. சித்திரை மாதத்து சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ பார்வதியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சித்ரா பௌர்ணமி தினத்தன்று நெய்தீபம்  ஏற்றி ஸ்ரீ குபேரன் துணைவியார் ஸ்ரீ சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும்.

சாதாரண நாட்களை விட பௌர்ணமியில் தெய்வ தரிசனம் சிறந்த பலன்களை தரும். பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம் என்பது பலரும் அறிந்த ஒரு வி~யமே ! பௌர்ணமியில் மலை மீது பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கும்.
பௌர்ணமியில் கிரிவலம் வருவது, விரதம் மேற்கொள்வது போன்ற செயல்கள் மனதை தூய்மைப்படுத்துவதாக கூறப்படுகிறது. பௌர்ணமியில் முழு நிலவு தரும் பிரகாச ஒளி உங்கள் மனதிலும், வாழ்விலும் ஏற்பட பௌர்ணமி வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம்.
பௌர்ணமியில் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட, வாழ்வில் சகல வளங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.

1. சித்திரை :  இந்த பௌர்ணமி சித்ரா பௌர்ணமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் நாம் முறையாக பூஜை செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நைவேத்யமாக எலுமிச்சை சாதம், பானகம், ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம் வைக்க செல்வம் நிலைக்கும். தானியம் பெருகும்.

2. வைகாசி  :  இப் பௌர்ணமி விரதம் செய்தால் பிறவா நிலையை அடையலாம். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கலும், விளாம்பழமும் வைப்பது சிறப்பானது. இதனால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும்.

3.  ஆனி :  இந்ந மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால், காரிய வெற்றி கிட்டும். எடுத்த காரியங்கள் அனைத்தும் சுபமாக முடியும். நைவேத்தியமாக உளுந்தம் பருப்பு சாதமும், முக்கனிகளையும் படைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். இந்நாளில் சாவித்திரி பூஜை செய்வது மாங்கல்ய பலம் அதிகரிக்க செய்யும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு விரைவில் குழந்தை உண்டாகும் என்பது உண்மை.

4.  ஆடி  :  ஆடி மாதம் வரும் பௌர்ணமி மிகவும் விசே~மானது. அன்றைய தினத்தில் நம் குல தெய்வத்தை நினைத்து, மந்திரங்கள் ஜபித்து, விரதம் அனு~;டித்து அம்மனுக்கு பால் அபிN~கம் செய்து, வாழைப்பழத்தை சாதத்துடன் கலந்து நைவேத்தியமாக படைத்து, விளக்கேற்றி வழிபட்டு வந்தால் சகல யோகங்களும் வந்து சேரும். ஆடி மாத பௌர்ணமியிலும ஸ்ரீ சாவித்திரி விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன்களை தரும். வடமாநிலத்தவர்கள், கோபத்ம விரதம், ஸ்ரீ சாவித்ரி விரதம் இந்த பௌர்ணமியில் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5. ஆவணி :  இந்த பௌர்ணமியில் விரதம் இருப்பது கடன் தொல்லைகள் நீங்க வழிவகுக்கும் . இந்த நாளில் ஸ்ரீ அம்பிகையை துதித்து விளக்கேற்றி , நெய் கலந்த சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். மேலோங்கி இருக்கும் கடன் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும்.

6.  புரட்டாசி : புரட்டாசியில் வரும் பௌர்ணமி அன்று விரதமிருந்து திருமாலை வணங்கி, மாவிளக்கு இட்டு. வழிபட்டால் வாழ்வில் சகல நன்மைகளும் நடைபெறும். குடும்பத்தில் ஸ்ரீ லட்சுமி கடாட்சம் உண்டாகும். புராட்டாசி பௌர்ணமிக்கு நைவேத்தியமாக இளநீர் படைப்பது விசே~மானது.

7.  ஐப்பசி  :  ஐப்பசியில் வரும் பௌர்ணமி விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் பசி, பிணிகள் நீங்கும். வெண் பொங்கலும், நெய் பொங்கல் படைத்து ஸ்ரீ அம்பிகைக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தால் வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

8.  கார்த்திகை : கார்த்திகை மாத பௌர்ணமியில் வீட்டில் விளக்கேற்றி  ஈசனை வழிபட, விரதம் மேற்கொண்டு,  சிவன் தலத்திற்கு சென்று வழிபட்டால் பேரும், புகழும் நிலைத்து நிற்கும் . இந்த மாத பௌர்ணமி தீபத் திருவிழாவாக விசே~மாக கொண்டாடப்படுகிறது.

9.  மார்கழி  :  மார்கழி மாதம் வரும் பௌர்ணமியில் ;விரதமிருந்து, விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும் உடல் நலம் சீராகும்.  நைவேத்தியமாக களியை படைத்து வழிபாடு செய்தால் க~;டங்கள் நீங்கும். மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் திருவாதிரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

10.  தை  :  தை மாதம் வரும் பௌர்ணமியில் விரதமிருந்து, வீட்டில் விளக்கு ஏற்றி சூரிய பகவானை வழிபட்டு, வெல்ல பாயசம் நைவேத்தியம் படைத்து, வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும். தை மாதம் வரும் பௌர்ணமியில் திருவிடைமருதூர் திருக்கோயில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

11.  மாசி :  மாதி மாதம் வரும் பௌர்ணமியில்  ஸ்ரீ மகாலட்சுமியை துதித்து,  பாடி, தாமரை மலர்களால் பூஜித்து, கல்கண்டு பாயசம் நைவேத்தியம் செய்தால் எதிர்பாராத விதமாக செல்வம் பெருகும்.

12.  பங்குனி :  பங்குனி மாதம் வரும் பௌர்ணமியில் விரதமிருந்து வழிபாடு செய்தால் தர்மம் செய்த பலன் கிடைக்கும். பொங்கல் படைத்து, ஹரிஹரனை வணங்கி, விரதமிருந்தால்  சிவ தீட்சை பெற்ற யோகம் இந்த வழிபாடு பெற்று தரும்.

பௌர்ணமி என்பதே சிறந்த நாளாக இருக்கும். கிரிவலம் வருவது, திருஆலய தரிசனம் செய்வது, திருகோபுர தரிசனம் செய்வது, ஸ்ரீ பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும் ஸ்ரீ சத்ய நாராயணா பூஜையில் பங்கு பெறுதல், காலத்தை நிர்ணயம் செய்யும் ஸ்ரீகால பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடுதல், சிவபெருமானை வழிபடுவது, முருகப்பெருமானை வழிபடுவது  மற்றும் மகான்களின் தரிசனம் சிறப்பான பலன்களை தரும்.

 
மேலும் துளிகள் »
temple news
ஹூப்பள்ளி நகரின் கோகுலம் சாலையின் காந்தி நகரில் வரலாற்று பிரசித்தி பெற்ற பலமுறி கணபதி கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
தாய் மனம் குளிர தமிழில் அர்ச்சனை நடக்கும் பெருமைக்குரியது ஆதிசக்தி மாரியம்மன் கோவில். இது, ... மேலும்
 
temple news
பெங்களூரில் பல்வேறு பகுதிகளில், ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனி சிறப்பு கொண்டவை. வரலாற்று ... மேலும்
 
temple news
நகரத்திற்குள் பழமையான கோவில்கள் இருப்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட பழமையான கர்நாடக கோவில்கள் பற்றி ... மேலும்
 
temple news
பெங்களூரு – கனகபுரா பிரதான சாலையில், சுப்பிரமண்யபுரா வசந்தபுராவின் குப்தகிரி மலையில், ஸ்ரீவசந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar