பதிவு செய்த நாள்
21
ஜூன்
2021
04:06
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் கோவில் பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாத சம்பளம் பெறாமல் பணி செய்யும் பூசாரிகளுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு வரவேற்றார்.அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி 88 பூசாரிகளுக்கு தலா 4,000 ரூபாய் வீதம் 3.52 லட்சம் ரூபாய் மதிப்பில் நிவாரண உதவித் தொகை, தலா 10 கிலோ அரிசி மற்றும் 15 விதமான மளிகை பொருள் தொகுப்பை வழங்கினார். கலெக்டர் மோகன், எஸ்.பி., ஸ்ரீநாதா, பி.ஆர்.ஓ., லோகநாதன், செஞ்சி டி.எஸ்.பி., இளங்கோவன், தாசில்தார் நெகருன்னிசா, கோவில் ஆய்வாளர் அன்பழகன், மேலாளர் மணி , ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்ரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் பங்கேற்றனர்.