பதிவு செய்த நாள்
19
ஜூன்
2012
10:06
தூத்துக்குடி: திருச்செந்தூரில், உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன, என, தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார். நேற்று அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழாவையொட்டி, உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை, திருச்செந்தூரில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஸ்தபதிகள், நாகர்கோவிலில் உள்ளனர். அவர்கள், இங்கு அமைக்கப்படவுள்ள, முருகனின் மாதிரி சிலையை வடிவமைத்து தந்தனர். இங்குள்ள கோவில் மூலவர் சுப்பிரமணியர் போன்ற தோற்றம் கொண்ட அச்சிலையில், சிலமாற்றங்கள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு கற்சிலை அமைக்கப்படவுள்ளதா அல்லது கான்கிரீட் சிலை அமைக்கப்படவுள்ளதா என, இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இச்சிலைக்கான செலவை, சிருங்கேரி மடத்தார் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளனர். சிலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு, முடிவு செய்யப்பட்ட பின்னரே, செலவை முழுமையாக அவர்கள் ஏற்றுக் கொள்வரா அல்லது, மற்றவர்களோடு சேர்ந்து, அவர்களும் நிதி உதவி செய்வரா எனத் தெரிய வரும். இவவாறு ஆஷிஷ்குமார் கூறினார்.