பதிவு செய்த நாள்
06
ஜூலை
2021
11:07
ராமநாதபுரம் : தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் நேற்று முதல் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து ராமநாதபுரம் வழிவிடுமுருகன், குண்டுக்கரை சுவாமிநாதசுவாமிகோயில், சிவன்கோயில், கோதண்டராமர் கோயில் உள்ளிட்ட இடங்களில் காலை, மாலை நேர பூஜைகளில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியே பின்பற்றி சாமிதரிசனம் செய்தனர். கொடிய கொரோனா தொற்று நோயை அழிக்க வேண்டிக் கொண்டதாகவும், பலநாட்களுக்கு பிறகு கோயிலில் சாமிதரிசனம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளதாக பக்தர்கள் கூறினர்.ராமேஸ்வரம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.பல பகுதியிலிருந்து ராமேஸ்வரம் வந்த பக்தர்கள், முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி கோவில் அக்னி தீர்த்த கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து, தீர்த்த கடலில் புனித நீராடினர். பின்னர் முக கவசம் அணிந்தபடி கோயிலுக்குள்சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பாகம்பரியாள் கோயிலில் நேற்று காலையில் கோ பூஜையுடன்நடை திறக்கப்பட்டது.பசு மாட்டிற்கு சந்தனம்,குங்குமம் இட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டது. சிவாச்சாரியார் மணிகண்டன் குருக்கள் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.