மதுரை: அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் உலக நன்மைக்காகவும், நோய் தொற்று நீங்கவும் கோயில்கள், வீடுகளில் இருந்த படி மக்கள் பங்கேற்கும் வகையில் இணையவழி தொடர் பிரார்த்தனை நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக ராமேஸ்வரத்தில் மகா சங்கல்பம் நடந்தது. ராமேஸ்வரம் போடி கோடி தீர்த்தத்தில் நோய் தொற்றால் உயிரிழந்தவர்கள் நற்கதியை அடைய வேண்டி மகா சங்கல்பம், பூஜைகள், தானம் செய்யப்பட்டது. உலக நன்மை வே ண்டி கோ பூஜையும் நடந்தது. தொடர்ந்து முக்தி பதிகம் பாராயணம் செய்யப்பட்டது. அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க அகில இந்தியதுணைத் தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார், புதுச்சேரி காரைக்கால் மாவட்ட நிதி ஆலோசகர் சிவராமமூர்த்தி ஷர்மா , ராமேஸ்வரம் தலவேத பண்டிதர்கள் பங்கேற்றனர்.