விருதுநகர் : ஊரடங்கு தளர்வால் விருதுநகர் மாவட்ட கோயில்கள் திறந்த நிலையில் பக்தர்கள் நெஞ்சம் நெகிழ்ந்து வழிபட்டனர்.
ஒன்றரை மாதம் பின் நேற்று கோயில்கள் திறக்கப்பட்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில், அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோயில், திருச்சுழி பூமிநாதர் கோயில், ராஜபாளையம் மாயூரநாதர் கோயில், விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில், சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயில், திருத்தங்கல் நின்றநாராயண பெருமாள் கோயில் உள்ளிட்ட மாவட்ட முக்கிய கோயில்களில் மக்கள் வழிபட்டனர். இதே போல் சர்ச் , மசூதிகளிலும் வழிபாடு நடந்தது.