பாலசமுத்திரம்: பழநி, பாலசமுத்திரம் அருகே பாலாறு அணை செல்லும் வழியில் பழமையான சிவன் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இந்த சிவன் இருந்தது. தற்போது இந்த கோயிலை தன்னார்வலர்கள் சிலர் மராமத்து பணிகளை துவங்கி பாலாலய பூஜை இன்று செய்துள்ளனர். இக்கோயிலின் மூலவர் அக்னீஸ்வரர் லிங்கத்தை கிரேன் மூலம் அருகே உள்ள இடத்தில் வைத்து சிவனடியார்கள் பாலாலயம் செய்தனர். இக்கோயிலின் பழமை மாறாமல் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், ஒரு நிலை கோபுரம் உள்ளிட்டவற்றை கட்ட தீர்மானித்துள்ளனர். இப்பகுதியும் பல ஆண்டுகள் கழித்து பழமையான இந்த சிவாலயத்தில் பாலாலயம் நடைபெற்றதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.