பதிவு செய்த நாள்
09
ஜூலை
2021
05:07
கோபி: ஊரடங்கு தளர்வால் இரு மாதங்களுக்கு பின், பச்சமலை முருகன் கோவிலில், 143 கிலோ எடை கொண்ட வெண்கல மணி நேற்று நிறுவப்பட்டது.
கோபி அருகே பிரசித்தி பெற்ற பச்சமலை முருகன் கோவிலில், கடந்த பிப்.,24ல், மூன்றாவது கும்பாபி?ஷக விழா நடந்தது. படிக்கட்டு வழியாக. மலைக்கோவிலை அடையும் இடத்தில், முன்பு மணி மண்டபம் கட்டப்பட்டிருந்தது. இங்கு சிறியளவில் இருந்த வெண்கல மணியை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையும், ஏழு கால பூஜை நடக்கும் சமயத்தில், சங்கிலியை இழுத்து கோவில் சேவகர்கள் முன்பு மணி அடித்தனர். கும்பாபி?ஷகத்தை முன்னிட்டு, மணி மண்டபம் இடித்து புதிதாக, 30 அடி உயர்த்தி கட்டப்பட்டது. இதனால் பழைய மணிக்கு பதிலாக, கும்பகோணத்தில் தயார் செய்யப்பட்ட, 143 கிலோ எடை கொண்ட வெண்கல மணி, இரு மாதங்களுக்கு முன் கோவிலுக்கு வந்தது. ஆனால், அதன்பின் கொரோனா தொற்று ஊரடங்கு நடவடிக்கையாக, கோவில் நடை மூடியதால், வெண்கல மணி இணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வாக, கோவில் திறந்ததால் வெண்கல மணி இணைக்கும் பணி நேற்று நடந்தது. இரும்பு ஆங்கிள் கொண்ட குறுக்கு சட்டத்தில், பொருத்தப்பட்ட வெண்கல மணி, கிரேன் உதவியுடன் மணி மண்டபத்தில் தூக்கி நிறுத்தப்பட்டது. பின், 30 அடி உயத்தில் உள்ள மணியை கையால் இழுத்து அடிக்க வசதியாக, சங்கிலி இணைக்கப்பட்டது. இனி ஒவ்வொரு கால பூஜை சமயத்திலும், மணியின் ஓசை கோபியை கலகலக்கும் என, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.