நெல்லையப்பர் கோயிலில் 17 ஆண்டு மூடியிருந்த வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2021 11:07
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் 17 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த மூன்று கோபுர வாசல்கள் நேற்று திறக்கப்பட்டன. நெல்லையப்பர் கோயிலில் வடக்கு கோபுரவாசல் அருகே 2004ல் கொலை நடந்தது. அதன்பின் வடக்கு, மேற்கு, தெற்கு கோபுர வாசல்கள் மூடப்பட்டன. இந்நிலையில் ஜூலை 7ல் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஹிந்து அறநிலையத்துறை அமை ச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். மூடப்பட்டுள்ள கோபுரவாசல்களை திறக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை பக்தர்கள் வைத்தனர். இதையடுத்து 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 3 கோபுர வாசல்களும் திறக்கப்பட்டன. போலீசார், கோயில் பணியாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட்ட போது தற்செயலாக அவ்வழியே வந்த புதுமண தம்பதிக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது . வாசலை அடைத்து வைக்கப்படிருந்த சில வணிக நிறுவனங்களின் விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன.