திருப்பதி : ஆகஸ்ட் மாதத்திற்கான, 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள், வரும் 20ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே கிடைத்து வருகின்றன. அதை பக்தர்கள் முன்பதிவு செய்து, ஏழுமலையானை தரிசிக்கின்றனர். ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான டிக்கெட்டுகள், அதற்கு முந்தைய மாதத்தின் இறுதி வாரங்களில், தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டுகள், வரும் 20ம் தேதி காலை 9:௦௦ மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினர். இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.