Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

இன்றைய செய்திகள் :
கடகம் : ஆடி ராசிபலன் கடகம் : ஆடி ராசிபலன் கன்னி : ஆடி ராசிபலன் கன்னி : ஆடி ராசிபலன்
முதல் பக்கம் » புரட்டாசி ராசிபலன் (17.9.2021 முதல் 17.10.2021 வரை)
சிம்மம் : ஆடி ராசிபலன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2021
16:38

மகம்:
பழகுவதற்கு இனிமையானவரான மகம் நக்ஷத்திர அன்பர்களே இந்த மாதம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு  உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை. குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம்.  அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை  நம்புவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும், வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் மன வருத்தம் ஏற்படும்படியான  சூழ்நிலை உருவாகலாம். எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்கள் கோபத்தை தவிர்த்து  நிதானமாக பேசுவது உதவும். கலைத்துறையினர் நல்ல லாபம் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்கள் நற்பெயர் எடுப்பார்கள். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்.  மாணவர்கள் திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 13, 14

பூரம்:
தன்னலம் கருதாமல் பிறர் நலத்தை மனதில் கொண்டு செயல்படும் பூரம் நக்ஷத்திர அன்பர்களே இந்த மாதம் உங்கள் அறிவுத் திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக  இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. பூர்வீக சொத்துக்களில் இருந்த  பிரச்சனைகள் குறையும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக  இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த  அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும்  கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும். பெண்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவு எடுப்பீர்கள்.  கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள். அரசியலில் உள்ளவர்கள் வாழ்க்கை தரம் உயரும். மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும்.

பரிகாரம்: ஆண்டாள் தாயாரை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 14, 15

உத்திரம் - 1:
எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட்டு வரும் உத்திரம் நக்ஷத்திர அன்பர்களே இந்த மாதம் பொருள் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்கது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து  கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த  மனவருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள்  எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம்  எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும். பெண்கள் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  கலைத்துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் செலவு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: காளியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 15, 16

 
மேலும் புரட்டாசி ராசிபலன் (17.9.2021 முதல் 17.10.2021 வரை) »
temple
அசுவினி:அடுத்தவர் யாரும் குறை கூறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அசுவினி நட்சத்திர அன்பர்களே ... மேலும்
 
temple
கார்த்திகை - 2, 3, 4:எடுத்த கொள்கையில் மாறாமல் இருக்கும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் ... மேலும்
 
temple
மிருகசீரிஷம் - 3, 4:முயற்சிகளில் தொய்வில்லாமல் உழைக்கும் மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் ... மேலும்
 
temple
புனர்பூசம் - 4:சொல்லாற்றலுடன் செயலாற்றலும் கொண்டு செயல்படும் புனர்பூச நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் ... மேலும்
 
temple
மகம்:எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மக நட்சத்திர அன்பர்களே நீங்கள் சூழ்நிலைக் கேற்றவாறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.