Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

இன்றைய செய்திகள் :
மிதுனம் : ஆடி ராசிபலன் மிதுனம் : ஆடி ராசிபலன் சிம்மம் : ஆடி ராசிபலன் சிம்மம் : ஆடி ராசிபலன்
முதல் பக்கம் » புரட்டாசி ராசிபலன் (17.9.2021 முதல் 17.10.2021 வரை)
கடகம் : ஆடி ராசிபலன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2021
16:37

புனர்பூசம் - 4:
எப்போதும் நிதானமாகக் காணப்படும் புனர்பூச நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் நக்ஷத்ராதிபதி குருவின் பாதசார சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த  உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும்.  எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை  தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்,  மனைவிக்கிடையே சின்ன சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலை தரும். பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கலைத்துறையினர்  கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். அரசியல்துறையினர் அனைத்து விதத்திலும் நன்மைகளைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு கவனத்தை சிதற விடாமல் வகுப்பை  கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: குலதெய்வத்திற்கு விரதம் இருந்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 10, 11

பூசம்:
நியாயத்தின் பக்கம் நிற்கும் பூசம் நக்ஷத்திர அன்பர்களே நீங்கள் அநியாயத்தை எதிர்க்கும் குணமுடையவர். இந்த மாதம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன்  கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன்  வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு  செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி  விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. பெண்கள் பேச்சு திறமையால்  காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். அரசியல்துறையினர் எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கலைத்துறையினர் கடன் கொடுப்பது,  பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 11, 12

ஆயில்யம்:
யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப் படாமல் தனித்தன்மையுடன் விளங்கும் ஆயில்யம் நக்ஷத்திர அன்பர்களே நீங்கள் நேர்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை  உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த  பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக  பொழுதை கழிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள்  மேற் கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். பெண்கள் காரியங்களை துணிச்சலாக செய்து  முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினர் கௌரவம் உயரும். அரசியலில் உள்ளவர்கள் தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு  கிடைக்காமல் போகலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 12, 13

 
மேலும் புரட்டாசி ராசிபலன் (17.9.2021 முதல் 17.10.2021 வரை) »
temple
அசுவினி:அடுத்தவர் யாரும் குறை கூறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அசுவினி நட்சத்திர அன்பர்களே ... மேலும்
 
temple
கார்த்திகை - 2, 3, 4:எடுத்த கொள்கையில் மாறாமல் இருக்கும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் ... மேலும்
 
temple
மிருகசீரிஷம் - 3, 4:முயற்சிகளில் தொய்வில்லாமல் உழைக்கும் மிருகசீரிட நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் ... மேலும்
 
temple
புனர்பூசம் - 4:சொல்லாற்றலுடன் செயலாற்றலும் கொண்டு செயல்படும் புனர்பூச நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் ... மேலும்
 
temple
மகம்:எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மக நட்சத்திர அன்பர்களே நீங்கள் சூழ்நிலைக் கேற்றவாறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.