Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம் : ஆடி ராசிபலன் மீனம் : ஆடி ராசிபலன் மீனம் : ஆடி ராசிபலன்
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை)
கும்பம் : ஆடி ராசிபலன்
எழுத்தின் அளவு:
கும்பம் : ஆடி ராசிபலன்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2021
04:07

அவிட்டம் - 3, 4:
தன்னுடைய அயராத முயற்சியினால் வெற்றி பெறும் அவிட்ட நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை  தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரம்  தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து  சொல்லாமல்  இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன  பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும். பெண்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். கலைத்துறையினர் எதிலும் அமைதியாக இருப்பது  நல்லது.  அரசியல்துறையினருக்கு கடன்கள் அடையும் சூழ்நிலை உருவாகும். பிரச்சனைகள் முடிவிற்கு வரும். மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல  தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.

பரிகாரம்: நரசிம்மருக்கு நெய்தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.  
சந்திராஷ்டம தினங்கள்:  ஆகஸ்டு 10
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 26

சதயம்:
எந்த நேரத்திலும் அனைவருக்கும் உதவும் இயல்பு உடைய சதயம் நக்ஷத்திர அன்பர்களே நீங்கள் கற்பனை வளமும் கலையார்வமும் மிக்கவர்கள். இந்த மாதம் விருப்பங்கள் கைகூடும். பயன்தரும்  காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பண வரத்து குறையும்.  வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம் போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணதேவை  ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும்.  கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த  உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும்.  மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள்.

பரிகாரம்: நாகதேவதையை வணங்கி வர மனகவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
சந்திராஷ்டம தினங்கள்:  ஆகஸ்டு 11
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 27

பூரட்டாதி - 1, 2, 3:
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை ரகசியமாகவே வைத்திருக்கும் பூரட்டாதி நக்ஷத்திர அன்பர்களே இந்த மாதம் எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். உடல்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலத்திற்கு செலவு செய்ய வேண்டி வரலாம். எதிர்பார்த்த பணவரத்து தாமதமாக வந்து சேரும். எந்த வாக்குறுதியும் கொடுக்கும் முன் யோசித்து செயல்படுவது  நல்லது. மற்றவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு  வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. பெண்களுக்கு எந்த வாக்குறுதியையும்  கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினர் தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். அரசியல்துறையினர் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கவனமுடன் படிப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை.

பரிகாரம்: முருகப் பெருமானை கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்கி வர அனைத்து நலன்களும் வளங்களும் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 16, 17 -  ஆகஸ்டு 12
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 28 - ஆகஸ்டு 01, 02

 
மேலும் பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »
temple news
அசுவினி; குரு சந்திரன் இணைவுடன் பிறக்கும் இந்த மாதத்தில் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்; ஆற்றல் காரகனையும் கலைக்காரகனையும் தம்முள் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3,4 ம் பாதம்: வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு இந்த மாதம் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4ம் பாதம்; மனக்காரகனான சந்திரன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இந்த ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar