பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் முத்துப்பல்லக்கில் அருள்பாலித்தார்.
நேற்றுமுன்தினம் ஆண்டாள் - பெருமாள் மாலை மாற்றல் வைபவம்நடந்தது. 7ம் திருநாளான நேற்று பெருமாள் முத்துப்பல்லக்கில் சேவை சாதித்து கருப்பண்ண சாமி சன்னதியில் தீபாராதனை நடந்தது.இன்று நவநீத கண்ணன் திருக்கோலமும், மாலை குதிரை வாகனத்தில் பெருமாள் அருள்பாலிப்பார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.