வாராஹி அம்மன் அலங்காரத்தில் மஞ்சள் மாதா பகவதியம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2021 10:07
வெள்ளகோவில்: வெள்ளகோவில், குமாரவலசு சாலையில் ஸ்ரீ ஐயப்பசுவாமி கோவிலில் நேற்று குரு பௌர்ணமி மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று ஸ்ரீ மஞ்சள் மாதா பகவதியம்மனுக்கு வாராஹி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஐயப்ப சுவாமி அலங்காரத்தில் நேற்று 108 திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐயப்பா சேவா சங்கம், ஐயப்பா பூஜா சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.