சதுரகிரியில் ஆடி பவுர்ணமி வழிபாடு: பக்தர்கள் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2021 11:07
வத்திராயிருப்பு: துரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு 8 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலையடிவாரத்தில் பக்தர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். காலை 6:15 மணிக்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அறநிலைத்துறை, வனத்துறையினர் அனுமதித்தனர். 11:30 மணி வரை சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் மலையேறினர். அதன்பின் வந்த பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சன்னிதியில் பவுர்ணமி பூஜை வழிபாடுகளை கோயில் பூசாரிகள் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர். மலையில் கோயில் நிர்வாகத்தின் சார்பிலும், தாணிப்பாறை அடிவாரத்தில் தனியார் மடங்களின் சார்பிலும் பக்தர்களுக்கு இடைவிடாது அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. லிங்கம் கோயில் அருகே உடைந்த பாலம் சீரமைக்கப்படாததால் மகாராஜாபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கபட்டனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.